2020 ஆம் ஆண்டுக்கான ஒளிவிழா நிகழ்வுகள்
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து வழங்கும் ஒளி விழாவானது கல்வி அமைச்சு முன்றலில் 23.12.2020 ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கு அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிறிஸ்தவ குருமார்கள் கலந்து ஆசியுரை வழங்கினார்கள். கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்களால் கரோல் கீதமும் இசைக்கப்பட்டது. நன்றியுரையை பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் திருமதி. சுஜீவா சிவதாஸ் அவர்கள் வழங்கினார்கள்.