அறிவித்தல்
கற்பித்தல் பற்றிய தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களை மாகாண அரசாங்க சேவையின் கீழ் ஆசிரியர்களாக ஆட்சேர்ப்புச் செய்தல் - 2020 (2021)
386 டிப்ளோமாதாரர்களிடமிருந்து கோரப்பட்ட ஆவணங்களில் 332 விண்ணப்பதாரர்களில் நகல் மூலமாக ஆவணங்களை அனுப்பி வைத்துள்ளனர். அவை கிடைக்கப்பெற்றுள்ளன என்பதனை சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இத்தால் அறிவிக்கின்றேன்.
மேலும் ஆவணங்களை இதுவரை அனுப்பத் தவறிய / இதுவரை எமக்கு ஆவணங்கள் கிடைக்கப்பெறாத 54 விண்ணப்பதாரர்களின் விபரங்கள் மட்டும் இவ் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படுகின்றது. அவர்கள் மட்டும் கீழ்க் குறிப்பிடப்படும் ஆவணங்களின் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப்பிரதியை வட மாகாண கல்வி அமைச்சின் 021 222 0794 இலக்க தொலைநகல் ஊடாக 2021.01.13 ஆம் திகதி புதன் கிழமை பிற்பகல் 4.15 மணிக்கு முன்னராக கிடைக்கக் கூடியவாறு அனுப்பி வைப்பதுடன் அதன் மூலப் பிரதியினை செயலாளர் , கல்வி அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் எனும் முகவாpக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். அனுப்பி வைக்கப்படும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “கற்பித்தல் பற்றிய தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரா; ஆசிரியர் நியமனம் - 2020 (2021)” எனக் குறிப்பிடவும்
- தேசிய அடையாள அட்டை
- பிறப்புப் பதிவுப் புத்தகம்
- விவாகச் சான்றிதழ் (திருமணமான பெண்கள் மட்டும் கட்டாயம் சமர்ப்பித்தல் வேண்டும்)
குறிப்பு : தொலைநகல் மூலம் ஆவணங்களை அனுப்பி வைத்த 332 விண்ணப்பதாரர்கள் தமது ஆவணங்களின் மூலப்பிரதிகளை கட்டாயம் தபாலில் சேர்ப்பித்திருத்தல் வேண்டும் என்பதனை விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
List: