”வடந்தை – 2023” நூலுக்கான ஆக்கங்கள் கோரல்                 

 

  

எமது  திணைக்களத்தினால் வருடா வருடம் வெளியிடப்படும்   வடமாகாண   பண்பாட்டம்சங்களை உள்ளடக்கிய ‘வடந்தை’ நூலுக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன. இந்நூலில் உள்ளடக்கப்படுவதற்கான  தரமான  ஆக்கங்கள்  எழுத்தாளர்களிடமிருந்து   எதிர்பார்க்கப்படுகின்றன.

 

பின்வரும் விதிமுறைகளைப் பின்பற்றி கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளுக்கமைவான ஆக்கங்களை 26.05.2023 ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு கிடைக்கக் கூடியவாறு அனுப்பி வைக்கவும்.

 

விதிமுறைகள்

 1. ஆக்கங்கள் அனைத்தும் வடக்கு மாகாணம் சார்ந்ததாக இருத்தல் வேண்டும்.
 2. அரசியல் கலப்பற்றதாக இருத்தல் அவசியம்.
 3. தனிப்பட்ட நபரை பாதிக்காது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
 4. ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
 5. ஆக்கமானது அவரவர் சொந்த ஆக்கமாக இருப்பதனை உறுதிப்படுத்தல் வேண்டும்.
 6. முன்னர் எந்த பத்திரிகைகளிலோ, சஞ்சிகைகளிலோ பிரசுரிக்கப்படாத ஆக்கங்களாக இருத்தல் வேண்டும்.
 7. கணனியியில் தட்டச்சு செய்யப்பட்ட (Font Size – 12) மென்பிரதிகளை (Soft Copy) கீழே தரப்படும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பதுடன் அதன் வன்பிரதியினை(Hard Copy) அலுவலக முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்கவும்.
 8. A4 தாளில் 4 பக்கங்களுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்.
 9. கையெழுத்துப் பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
 10. முடிவுத்திகதிக்கு பின்னர் கிடைக்கும் ஆக்கங்கள் நிராகரிக்கப்படும்.

 

தலைப்புக்கள்

 1. உளரீதியான ஆற்றுப்படுத்தலில் கலைகளின் பங்கு
 2. வடமாகாண கலைகள் சர்வதேசம் நோக்கி பயணிப்பதற்கான ஏது நிலைகள்
 3. தமிழ்ப் பண்பாட்டில் மரபு வழிக் கல்வியின் வகிபாகம்
 4. தமிழர் வாழ்வில் கூட்டுக் குடும்பத்தினதும் தனிக்குடும்பத்தினதும் வகிபாகம்
 5. தமிழர் பாரம்பரியமும் உணவுப் பழக்க வழக்கங்களும்
 6. பொருளாதார மேம்பாட்டில் கலைகளின் பங்கு

அனுப்ப வேண்டிய முகவரி:

பிரதிப் பணிப்பாளர்,

பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,

கல்வி அமைச்சு,      

செம்மணி வீதி, நல்லூர்

 

தொலைபேசி இல: 0212054105

மின்னஞ்சல்: npc.culture@yahoo.com

இலங்கை அதிபர் சேவை III இற்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு 2023

மத்திய கல்வி அமைச்சினால் இலங்கை அதிபர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டு வடக்கு மாகாணத்திற்கு வழங்கப்பட்ட 401 நியமனதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 2023.11.04 ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெறவுள்ளமையினால் நியமனம் செய்யப்படவுள்ள நியமனதாரிகள் காலை 08.00 மணிக்கு பிந்தாமல் உரிய முறையில் வருகைதரல் வேண்டும்.

தெரிவு செய்யப்பட்ட நியமனதாரர்கள் தேசிய அடையாள அட்டை / செல்லுபடியாகும் கடவுச்சீட்டின் மூலம் தமது ஆளடையாளத்தினை உறுதிப்படுத்தி நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன் நியமனதாரர்;கள் தவிர்ந்த எவரும் நியமனக் கடிதங்களை பெற்றுக்கொள்ள முடியாது என்பதனையும் அறியத்தருகின்றேன்.

தங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்ட தொடர்பிலக்கத்தினைக் குறித்துக் கொள்வது தங்களுக்கான ஆசனங்களை இனங்காண்பதற்கு இலகுவாய் அமையும்.

 

தெரிவு செய்யப்பட்ட நியமனதாரர்கள் விபரம்

  

ம.பற்றிக் டிறஞ்சன்

செயலாளர்,

கல்வி அமைச்சு,

வடக்கு மாகாணம்.

Secretary

Mr. M. Patrick Diranjan
Secretary of Education, Cultural Affairs, Sports and Youth Affairs

Education Ministry Office,
Chemmany Road, Nallur, Jaffna, Sri Lanka

Tel:+94-21-221 9259
Fax: +94-21-222 0794
Mobile: 071 809 8059

Email:
patrickdiranjan@yahoo.com
npmoese@gmail.com

Vehicle Pass

December 2023
Mon Tue Wed Thu Fri Sat Sun
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
Carrier Guide Book