யுவதிகளுக்கான 3 மாதகால தற்காப்புக்கலை (கராத்தே) இலவச பயிற்சிநெறி
எதிர்வரும் 08.03.2021 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் முற்று முழுதாக மகளிர் பங்குகொள்ளும் 03 மாதகால தற்காப்புக்கலை (கராத்தே) இலவச பயிற்சிநெறி ஆரம்பிக்கப்படவுள்ளது. இப்பயிற்சிநெறியானது யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் இரு நிலையங்களில் இடம்பெறும். வடமாகாணத்தை வதிவிடமாகக் கொண்ட அனைத்து யுவதிகளும் கலந்துகொள்ள முடியும். பயிற்சிநெறிக்கான இலவச சீருடை மற்றும் பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி ஆரம்பத்திகதி – 08.03.2021
விண்ணப்பப்படிவங்களை வடமாகாண கல்வி அமைச்சின் இணையத்தளத்திலிருந்து (www.edumin.np.gov.lk) இலவசமாக தரவிறக்கம் செய்யவோ அன்றி நிகழ்நிலையில் (Online Form: https://forms.gle/bpuVMxPRH5U8t2Ft7 ) படிவத்தை பூர்த்தி செய்யவோ அல்லது எமது அலுவலக வரவேற்பு உத்தியோகத்தரிடம் நேரடியாக பெற்றுக்கொள்ளவோ முடியும்.
கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “மகளிர் தற்காப்புக்கலை பயிற்சிநெறி - 2021” எனக்குறிப்பிட்டு தபால் மூலம் அல்லது நேரடியாக விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட வேண்டிய முகவரி:
செயலாளர்,
கல்வி அமைச்சு, வ.மா,
செம்மணி வீதி,
நல்லூர், யாழ்ப்பாணம்.
விண்ணப்பங்களை விண்ணப்ப இறுதித்திகதியன்று அல்லது அதற்கு முன்னர் கடமை நேரத்தில் எமது அலுவலக வரவேற்பு உத்தியோகத்தரிடம் நேரடியாக ஒப்படைக்கலாம்.
(இணையத்தள முகவரி: www.edumin.np.gov.lk)
மேலதிக விபரங்களுக்கு 021 222 2203, 077 736 0783
நிபந்தனைகள்
- வடமாகாணத்தை வதிவிடமாகக் கொண்டிருத்தல் வேண்டும்
- வயதெல்லை: 19 – 40 வயது
- விண்ணப்ப இறுதித்திகதி: 02.2021 மாலை 4:00 மணி (தபால் மூலமாகவோ, நேரடியாக அனுப்பி வைக்க முடியும்)
குறிப்பு – பயிற்சிநெறியின் நேரம், மற்றும் சீருடையின் அளவு போன்ற விடயங்கள் வார நாளொன்றில் இடம்பெறும் ஒன்றுகூடல் மூலம் தீர்மானிக்கப்படும்.