தெய்வீக சுகானுபவ கலை அரங்கத் தொடர்
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் வடக்கு மாகாண தொழிற்றுறை திணைக்களம் ஆகியன இணைந்து நடாத்திய தெய்வீக சுகானுபவம் கலை அரங்கத்தொடர் நிகழ்வுகள் 2024.08.21 ஆம் திகதி தொடக்கம் 2024.08.31ஆம் திகதி வரை மாலை 6.30மணி முதல் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள சங்கிலியன் தோப்பு வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பதினொரு நாட்களும் வள்ளி திருமணம், பொம்மலாட்டம், கிராமியக் கலைக் கதம்பம், காத்தவராஜன் கூத்து, இசைச் சங்கமம், பண்டார வன்னியன் நாட்டுக்கூத்து, கும்மி, காவடி, வசந்தன் கும்மி, வேப்பிலை நடனம், கௌத்துவம், சிவதாண்டவம், சிந்துநடைக்கூத்து மற்றும் வில்லுப்பாட்டு போன்ற பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளானது உள்ளுர்க் கலைஞர்களின் பாரம்பரிய கலை ஆற்றுகைகளுக்கு களம் அமைத்துக் கொடுப்பதாய் அமைந்திருந்தது.