பிரதேச பண்பாட்டு விழா - 2024
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பண்பாட்டு விழா
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு விழா 03.07.2024 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியின் ஆருக்.ஷ்;கிருத்திக் கலையரங்கத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் சிறந்த கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அப்பிரதேசத்திற்கே உரித்தான பல்வேறு கலைநிகழ்வுகள் பிரதேச மாணவர்களாலும், பிரதேச கலைஞர்களாலும் நிகழ்த்தப்பட்டதுடன் “பசுந்துளிர்“ 09ஆவது பிரதேச சிறப்புமலர் வெளியிட்டு வைக்கப்பட்டமையும் முக்கிய அம்சமாகும்.
நெடுந்தீவு பிரதேச செயலக பண்பாட்டு விழா
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் நெடுந்தீவு பிரதேச செயலகமும் பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு விழா 26.07.2024 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நெடுந்தீவு தேவா கலாசார மண்டபத்தில் நெடுந்தீவு பிரதேசத்தின் பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பிரதேசத்துக்கேயுரித்தான கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் நெடுந்தீவுப் பிரதேசத்தின் சிறந்த கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் பிரதேச கலாசார பேரவையினால் நெடுங்கீற்று-VI எனும் பிரதேச சிறப்புமலர் வெளியிட்டு வைக்கப்பட்டது.
யாழ்ப்பாண பிரதேச செயலக பண்பாட்டு விழா
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணப் பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு விழா 30.07.2024 செவ்வாய்க்கிழமை காலை 9.00மணிக்கு யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் யாழ்ப்பாண பிரதேசத்தின் பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண பிரதேசத்தின் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அப்பிரதேசத்திற்கே உரித்தான பல்வேறு கலைநிகழ்வுகள் பிரதேச மாணவர்களாலும், பிரதேச கலைஞர்களாலும் நிகழ்த்தப்பட்டதுடன் யாழ்பாடி-08 சிறப்புமலர் வெளியிட்டு வைக்கப்பட்டமை முக்கிய அம்சமாகும்.