48 வது தேசிய விளையாட்டு விழாவில் வடமாகாண வீரர்களால் இரு சாதனைகள் பதிவு செய்யப்பட்டன. ….
இலங்கையின் 48 வது தேசிய விளையாட்டு விழா கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இம்மாதம் 17,18,19 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இதில் நாட்டிலுள்ள 9 மாகாண வீர,வீராங்கனைகள் பங்குபற்றினர்.
இப்போட்டிகளில் கோலூன்றிப்பாய்தல் ஆண்கள் பிரிவில் சாவகச்சேரியினைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரன் 5.11 மீற்றர் உயரத்தினை கடந்து புதிய சாதனையினை நிலைநாட்டியுள்ளார்.
அத்தோடு கோலூன்றிப்பாய்தல் பெண்கள் பிரிவில் சாவகச்சேரியினைச் சேர்ந்த நேசராசா டக்சிதா 3.51 மீற்றர் உயரத்தினைக் கடந்து புதிய சாதனையினை நிகழ்த்தியுள்ளார்.
இவர்கள் இருவரும் கடந்த காலங்களில் தங்களால் நிலைநாட்டப்பட்ட தங்களின் சொந்த சாதனைகள் மீளவும் தாங்களே முறியடித்துள்ளனர் என்பது விசேட அம்சமாகும்.