ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்பெருமானது 200ஆவது ஜெனன தினமும் ஆக்கத்திறன் போட்டிகளுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும்

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இந்துப் பண்பாட்டு நிதிய அனுசரணையுடன் நடாத்திய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்பெருமானது 200ஆவது ஜெனன தினமும் ஆக்கத்திறன் போட்டிகளுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் 11.06.2024 செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு யாழ்ப்பாணப் பொதுநூல் நிலைய மாநாட்டு மண்டபத்தில் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருமதி லாகினி நிருபராஷ் அவர்களின் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு செயலாளரின் பிரதிநிதியாக சிரேஷ்ட உதவிச் செயலாளர் திரு.வே.ஆயகுலன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினராக ஸ்ரீ சிவகுருநாத குருபீடம், வேதாந்தமடம் குரு பீடாதிபதி ஸ்ரீமத் வேதவித்தியாசாகரர் சுவாமிகள்  அவர்களும் கலந்து சிறப்பித்தார். இவர்களுடன் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், கலாசார உத்தியோகத்தர்கள், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மண்டப நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சிக்கூட முன்றலில் கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளரால் நாவலர் பெருமான் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து மங்கல விளக்கேற்றி பஞ்சபுராணம் இசைக்கப்பட்டது. கைதடி இயல் சேஷ்திரா கலாமன்ற மாணவர்களின் வரவேற்பு நடனம், பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளரது தலைமையுரை, கைதடி இயல் சேஷதிரா கலைமன்ற மாணவர்களின் நாவலர் குடம் நடனம், பேச்சுப் போட்டி மாகாணமட்டத்தில் முதலாம் இடம் பெற்ற மாணவன் செல்வன் உ.அக்சயன் அவர்களின் ‘சைவமும் தமிழும் தழைத்தோங்க வித்திட்ட நாவலர் பெருமான்’ என்னும் தலைப்பிலான பேச்சு ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சிவகுருநாத குருபீடம் வேதாந்தமடத்தின் குரு பீடாதிபதியின் சிறப்பு விருந்தினர் உரையைத் தொடர்ந்து ஆறுமுகநாவலரின் வாழ்க்கை வரலாற்றினை பிரதிபலிக்கும் வகையில் அமைந்த ஒளிப்படக்காட்சி காட்சிப்படுத்தப்பட்டது. அமைச்சின் சிரேஸ்ட உதவிச்செயலாளரின் பிரதம விருந்தினர் உரையைத் தொடர்ந்து ஆக்கத்திறன் போட்டிகளில் வலயமட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் விருந்தினர்களால் வழங்கப்பட்டது. சக்கரம் சமூக அபிவிருத்திக்கான கலாமன்ற மாணவர்களால் ‘நாவினுக்கருங்கலம்’ எனும் நாவலர் பெருமானின் சிறப்புக்களை எடுத்துக்காட்டுகின்ற நாடகம் அரங்கேற்றப்பட்டதுடன் ஆக்கத்திறன் போட்டிகளில் மாகாண மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.

விழாவின் நிறைவாக கலாசார உத்தியோகத்தர் திரு.மா.அருள்சந்திரன் அவர்களின் நன்றியுரையுடன் மேடை நிகழ்வுகள் நண்பகல் 12.30 மணிக்கு நிறைவுபெற்று மண்டப முன்றலில் அமைக்கப்பட்ட நாவலர் பெருமானின் வாழ்க்கை வரலாற்றினை பிரதிபலிக்கும் வகையிலான கண்காட்சி ஆரம்பமாகி மாலை 3.30 மணி வரை நடைபெற்றது.

 

 

Secretary

Mr. M. Patrick Diranjan
Secretary of Education, Cultural Affairs, Sports and Youth Affairs

Education Ministry Office,
Chemmany Road, Nallur, Jaffna, Sri Lanka

Tel:+94-21-221 9259
Fax: +94-21-222 0794
Mobile: 071 809 8059

Email:
patrickdiranjan@yahoo.com
npmoese@gmail.com

Vehicle Pass

July 2024
Mon Tue Wed Thu Fri Sat Sun
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
Carrier Guide Book