Print

வடக்கு மாகாண தைப்பொங்கல் விழா 2024.

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு நடாத்திய வடக்கு மாகாண தைப்பொங்கல் விழா 16.01.2024 செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணிமுதல் பூநகரி பல்லவராயன்கட்டு மாதிரிக்கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாகபூ~னி அம்பாள் ஆலய வளாகத்தில் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களின் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களும், சிறப்பு விருந்தினராக பூநகரி பிரதேச செயலாளர் திரு.த.அகிலன் அவர்களும்; கலந்து சிறப்பித்தனர்.  இவர்களுடன் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரே~;ட உதவிச் செயலாளர், பிரதம கணக்காளர், கிளிநொச்சி வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர், கிளிநொச்சி தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் அமைச்சின் உத்தியோகத்தர்கள், பூநகரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கமக்காரர் அமைப்பினர், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்று விழா சிறப்பாக நடைபெற்றது.

ஏ32 நெடுஞ்சாலையில் பல்லவராயன்கட்டு சந்தியில் அமைந்துள்ள பல்லவராயன்கட்டு மாதிரி கிராம மக்களுக்கு உரித்தான வயல் நிலத்தில் பாரம்பரிய முறைப்படி பூசை வழிபாடுகளுடன் கௌரவ ஆளுநரினால் புதிர் எடுக்கப்பட்டு வடக்கு மாகாண தைப்பொங்கல் விழா இனிதே ஆரம்பமாகியது. பின்னர் பல்லவராயன்கட்டு மாதிரிக்கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாகபூ~னி அம்பாள் ஆலய முன்றலில் மாட்டுவண்டியில் புதிய நெற்கதிர்கள் எடுத்து வரப்பட்டு ஆலயமுன்றலில் உரலில் குத்திய நெல் அரிசியினைக்கொண்டு பாரம்பரிய முறைப்படி பொங்கல் இடப்பட்டமை விசேட அம்சமாகும்.

விசேடமாக அமைக்கப்பட்ட அரங்கில் விருந்தினர்களது மங்கல விளக்கேற்றலுடன் கலைநிகழ்வுகள் ஆரம்பமாகின. பூநகரி பிரதேச செயலக உத்தியோகத்தர்களது தமிழ்த்தாய் வாழ்த்துடன் அனைத்து நிகழ்வுகளும் ஆரம்பமாகின. வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருமதி லாகினி நிரூபரா~; அவர்களது வரவேற்புரையினைத் தொடர்ந்து பூநகரி வாடியடி சரவணப்பொய்கை கலைமன்ற மாணவர்களின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.

நிகழ்வின் தலைவரான  வடக்கு மாகாண கல்வி அமைச்சு செயலாளர் தலைமையுரையாற்றினார். கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய மாணவர்களது சிவதாண்டவ நடனம், வாடியடி சரவணப்பொய்கை கலைமன்ற மாணவர்களின்  கிராமிய நடனம், யாழ்ப்பாணம் நல்லூர் கலைக்குவியம் கலாமன்றத்தினரின் நாட்டார் பாடல், பரம செல்வ நர்த்தனாலய மாணவர்களின் கிராமிய கதம்ப நிகழ்ச்சி என்னும் சிறப்புக் கலைநிகழ்வுகள் மேடையை அலங்கரித்தன.  நிகழ்வில் பூநகரி பிரதேச செயலாளர் அவர்களது  சிறப்பு விருந்தினர் உரையும் கௌரவ ஆளுநர் அவர்களது பிரதம விருந்தினர் உரையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. பிரதம விருந்தினர் தமதுரையில் இவ்வாண்டு நடைமுறைப்படுத்தவுள்ள செயற்திட்டங்களையும் விவசாயிகளது அறுவடைப்பொருள்களை விற்பனை செய்வதற்கான டிஜிற்றல் வலையமைப்பு உருவாக்கப்பட்டு நன்மையடையவுள்ளதாகவும் பாரம்பரியங்கள் கைவிடப்படாத வகையில் அடுத்த சந்ததியினருக்கு எடுத்துக்காட்டும் விதமாக அனைத்து விடயங்களும் கடைப்பிடிக்கப்பட்டு பொங்கல் விழா நடைபெற்றமையை பாராட்டினார்.

நிகழ்வின் இன்னொரு சிறப்பம்சமாக முட்டி உடைத்தல், கிளித்தட்டு ஆகிய   பாரம்பரிய விளையாட்டுக்களும்  கௌரவ ஆளுநரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

பல்லவராயன்கட்டு கமக்கார அமைப்பினர் தமது கிராமத்தில் பொங்கல் நிகழ்வினை நடத்தியமைக்காக விழாவிற்கு வருகைதந்திருந்த விருந்தினர்கள் மற்றும் பங்களிப்பு வழங்கியவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசில் வழங்கி தமது நன்றியினை தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து கலைநிகழ்வுகளை வழங்கிய மாணவர்களுக்கும், பாரம்பரிய விளையாட்டில் ஈடுபட்ட வெற்றியாளர்களுக்கும்  விருந்தினர்களால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. விழாவின் நிறைவாக பூநகரி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி காசிநாதன் நிருபா அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட  அனைவருக்கும்  மதிய உணவு வழங்கப்பட்டு வடமாகாண தைப்பொங்கல் விழா பிற்பகல் 2.00 மணிக்கு இனிதே நிறைவுபெற்றது.

 

Hits: 3712