Print

இளம் இந்து குருமார்களுக்கான பயிற்சித்திட்டம்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்து பண்பாட்டு நிதியம் என்பவற்றின் அனுசரணையுடன் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ‘இளம் இந்து குருமார்களுக்கான பயிற்சித்திட்டம்’ தொடர்பான விடயங்களை நடத்துவதற்கா, வடமாகாண இந்து குருமார் ஆலோசனை சபை மற்றும் வடமாகாண இந்து குருமார் ஆலோசனை உபகுழு ஒன்றினை அமைப்பதற்காக கடந்த 12.11.2022ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.00 மணியளவில் கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய வகையில் இந்துகுருமார்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களின் தலைமையில் மங்கல விளக்கேற்றலுடன், காரைநகர் பிரதேசசெயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி.காசிநாதன் நிரூபா அவர்களது இறைவணக்கத்துடனும், சண்டிலிப்பாய் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி.ரஜனி நரேந்திராவினது வரவேற்புரையுடனும் நிகழ்வானது இனிதே ஆரம்பமானது.

நிகழ்வுகள் தொடர்பாகவும், கலந்துரையாடலின் நோக்கம் தொடர்பாகவும் பிரதிப்பணிப்பாளர் அவர்கள் தௌpவாக உரையாற்றினார். தொடர்ந்து வருகை தந்திருந்த குருமார்களால் அவர்களது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அவர்களின் ஒட்டுமொத்த கருத்தாக பின்வரும் வேண்டுகைகள் முன்வைக்கப்பட்டன.

முதலான விடயங்கள் தொடர்பாக பிரதிப்பணிப்பாளர் அவர்கள் யாப்பு உருவாக்கத்திற்கு பொறுப்பாக முன்னாள் யாழ் பல்கலைக்கழக பீடாதிபதி பிரம்மஸ்ரீ கோபாலகிருஷ்ணஜயா அவர்களை நியமித்து இந்து குருமார் ஆலோசனைச்சபை மற்றும் உபகுழு ஒன்றினையும் தெரிவுசெய்ததுடன், இளம் இந்து குருமார்களுக்கான பயிற்சித்திட்டத்தின் முதற்படியாக கணபதி ஹோமம் தொடர்பான பயிற்சி ஒன்றினை வடமாகாணத்தின் 5மாவட்டங்களிலும் நடத்துவதற்குரிய நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Hits: 1854