Print

“தென் யாழ்ப்பாணம்” நூல் வெளியீட்டு வைபவம் -2022

வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியீடு செய்யும் கலாபூஷணம் சி.சிவதாசன் அவர்களின் “தென் யாழ்ப்பாணம்” நூல் வெளியீட்டு வைபவமானது 2022.12.15 (வியாழக்கிழமை) காலை 09.30 மணியளவில் யாழ்ப்பாணம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திருவாளர் இ.வரதீஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். இவர்களுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சு.மோகனதாஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் பூ சிறில், முன்னாள் மாகாண கல்விப்பணிப்பாளர் வீ.இராசையா மற்றும் ஆசிரியர்கள், கலைஞர்கள், நூலாசிரியரின் உறவினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  

மங்கல விளக்கேற்றப்பட்டு, இறைவணக்கத்துடன் நிகழ்வானது இனிதே ஆரம்பமானது. யாழ் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி.வி.சுகுணாளினி அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. தலைமையுரையினை வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் அவர்கள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து “தென் யாழ்ப்பாணம்” நூல் வெளியீட்டு விழாவுக்கான அறிமுகவுரையினை நூலாசிரியர் கலாபூஷணம் திரு.சிவநாமம் சிவதாசன் அவர்கள் வழங்கினார். நூலுக்கான வெளியீட்டுரையை யாழ் வலயக்கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் திரு.யோ.யோண்சன் ராஜ்குமார் அவர்கள் வழங்கினார்.  நூலின் முதற் பிரதி வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களின் கரங்களால் நூலாசிரியருக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வருகை தந்திருந்த விருந்தினர்கள் அனைவருக்கும் நூலின் பிரதிகள் வழங்கப்பட்டன. தொடர்ச்சியாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களால் பிரதம விருந்தினர் உரையும் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வானது யாழ்ப்பாண கலாசார உத்தியோகத்தர் திரு.மாஅருள்சந்திரன் அவர்களினால் சிறப்பாக தொகுத்து வழங்கப்பட்டது. இறுதியாக நல்லூர் பிரதேசசெயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி.செ.விஜிதா அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வானது நண்பகல் 12.30 மணியளவில் இனிதே நிறைவுபெற்றது.

 

 

 

Hits: 12770