Print

வடக்கு மற்றும் வடமத்திய மாகாண தமிழ்,  சிங்கள கலைஞர்களின் கலாசார சங்கமம்

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடக்கு மற்றும் வடமத்திய மாகாண தமிழ், சிங்கள கலைஞர்களை ஒன்றிணைத்து கலாசார சங்கமம் என்ற நிகழ்வானது 18.03.2022 (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணியளவில் வட இலங்கை சங்கீத சபை மண்டபத்தில் (மருதனார்மடம்) ஆரம்பமானது. முதல் நிகழ்வாக தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியை சேர்ந்த மாணவர்களின் இன்னியம் மங்கல வாத்திய இசையுடன் விருந்தினர்கள் மற்றும் கலைஞர்கள் மாலை அணிவித்து நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வானது இனிதே ஆரம்பமானது.

கலைஞர்களின் அறிமுகத்தினை தொடர்ந்து மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. யாழ். மாவட்ட சிரே~;ட கலாசார உத்தியோகத்தர் திருமதி சுகுணாளினி விஜயரட்ணம் அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தினார். வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி. ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது. நிகழ்வின் போது வடமாகாண கல்வி அமைச்சின் பிரதம கணக்காளர், கணக்காளர் மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர் திரு.மு.ராதாகிரு~;ணன் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக சிங்கள,  தமிழ் நடனங்கள்,  கிராமிய கதம்பம்,  இசைநாடகப் பாடல்கள், சிங்களப்பாடல்கள், வடமோடிக்கூத்து,  றபான் இசையுடன் கூடிய நடனம்,  உடுக்கு இசை போன்ற கலை நிகழ்வுகள் நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டின.

பிற்பகல் 2.00 மணியளவில் வடமாகாண பிரதம செயலாளர் திருவாளர்.எஸ்.எம். சமன் பந்துலசேன அவர்கள் பிரதம விருந்தினராக வருகைதந்து விழாவினை மேலும்  சிறப்பித்தார். இவருடன் பிரதம செயலாளரின் இணைப்புச் செயலாளர் மற்றும் இறைவரித்திணைக்கள ஆணையாளரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். பிரதம செயலாளர் அவர்களால் பிரதம விருந்தினர் உரை நிகழ்த்தப்பட்டது.  பிரதம செயலாளர் அவர்கள் இந்நிகழ்ச்சி தொடர்பாகவும்,  எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் வடமாகாண பிரதிப் பணிப்பாளருடனும், நிகழ்வுக்கு வருகை தந்த கலைஞர்களுடனும் கலந்தாலோசித்;ததுடன் நிகழ்வின் இறுதியில் இடம்பெற்ற மதியபோசன விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார். மேலும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் மதியபோசனத்தில் இணைந்திருந்த தருணத்தில் அநுராதபுர மாவட்ட கலாசார உத்தியோகத்தரின் நன்றியுரையுடன் நிகழ்வானது பிற்பகல் 3.00 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.

Hits: 1677