Print

வடமாகாண நாடக கலைஞர்களுக்கான பயிற்சிப்பட்டறை - 2021

வடமாகாணக் கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் கீழ் நாடகக்கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான பயிற்சிப்பட்டறை நிகழ்கலை மூலமாக 15.10.2021 – 20.10.2021  வரை நடைபெற்றது. மேற்படி பயிற்சிப்பட்டறையில் கலந்துகொண்ட கலைஞர்களின் வேண்டுகோளிற்கமைய கலாநிதி.க.ரதிதரன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் யாழ். பல்கலைக்கழகம் மற்றும் திருவாளர்.தி.தர்மலிங்கம் விரிவுரையாளர் நடனமும் நாடகத்துறையும், விபுலானந்தா அழகியற்கற்கைகள் பீடம்,  கிழக்குப்பல்கலைக்கழகம் ஆகிய வளவாளர்களின் பங்குபற்றுதலுடன் மாவட்ட ரீதியாக பயிற்சிப்பட்டறை 20.11.2021 – 19.12.2021 வரை நடாத்தப்பட்டுவருகின்றது.

இதுவரை யாழ்ப்பாண மாவட்டம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது.

Hits: 2453