Print

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Zoom செயலி ஊடான புற்றுநோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் தொடர்பிலான இளைஞர் யுவதிகளுக்கான கருத்தமர்வுகள்

எதிர்வரும் 2021.09.15 மற்றும் 2021.09.16 ஆந் திகதிகளில் காலை 9.00 – 12:00 மணிவரை முறையே “பெரும் தொற்றுக்கான மன ஆரோக்கியம்” மற்றும் “இளையோரும் திறன்விருத்தியும்” எனும் தலைப்புகளிலமைந்த Zoom செயலி ஊடான கருத்தமர்வுகள் தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளதுடன் 2021.09.16 மற்றும் 2021.09.17 ஆந் திகதிகளில் காலை 9.00 – 12.00 மணிவரை முறையே “வாய்ப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய்” மற்றும் “தொற்றா நோய்” எனும் தலைப்பிலான விழிப்புணர்வுக் கருத்தமர்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இக்கருத்தமர்வுகளில் யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் கலந்துரையாட உள்ளனர்.

குறித்த நிகழ்விற்கான மேலதிக விபரங்கள் மற்றும் இணைப்புக்கள் என்பவற்றிற்காக அமைச்சின் இவ் இணையத்தளம் மற்றும் முகப்புத்தகப் பக்கம்  https://www.facebook.com/youthnorth ஆகியவற்றை அணுகவும். மேலும் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ள கருத்தமர்வுகள் மற்றும் பயிற்சிகள் போன்றவற்றின் விபரங்கள் உரிய காலத்தில் இவ்விணையங்களில் காட்சிப்படுத்தப்படும்.

 

பங்குபற்றுதல் வரையறுக்கப்ட்டுள்ளதால் முற்பதிவுகளிற்கு

https://forms.gle/uf2y1J4uzsufNFVk6

 

Hits: 3588