Print

நூல் வெளியீடு

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் புனித அந்தோனியார் நாடகம், புனித செபஸ்தியார் வாசகப்பா, மன்னார் மாதோட்டத் தமிழ் புலவர் சரித்திரம் ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா  மாந்தை வடக்கு பல நோக்கு கூட்டுறவு  சங்க மண்டபத்தில் 20.12.2020 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  பி.ப 3.00 மணிக்கு கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு   இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களும் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்களும் மன்னார்  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.அ.ஸ்ரான்லி டி மெல் அவர்களும் பிரதம விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தார்கள். மற்றும் சிறப்பு விருந்தினர்களும் கௌரவ விருந்தினர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

மன்னார் மாவட்ட கலைஞர்கள் விருந்தினர்களை வரவேற்றனர். பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் திருமதி. சுஜீவா சிவதாஸ் அவர்கள்  வரவேற்புரையாற்றினார். அத்துடன் பிரதம விருந்தினர்களின் உரைகளும் இடம்பெற்றது. அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார் அவர்களின் வெளியீட்டுரையூடன் மூன்று நூல்களும் வெளியிட்டு வைக்கப்பட்டது.  நூல்களுக்குரிய கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர். அம்மாவட்ட அண்ணாவியார்கள், நாட்டுக்கூத்து கலைஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

 

Hits: 2465