வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகினால் பதிவு செய்யப்பட்ட கலை மன்றங்களுக்கிடையில் நடத்தப்படும் பாரம்பரிய கலைத்திறன் வெளிப்பாட்டுப் போட்டிகள் – 2025
விபரங்கள்
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு பதிவு செய்யப்பட்ட கலைமன்றங்களின் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கும் அவற்றின் ஆக்கத்திறன்களை வெளிப்படுத்துவதற்கும், இளையோரிடையே பாரம்பரிய கலைகளின் முக்கியத்துவத்தினை உணரச்செய்யும் வகையிலும் அவற்றில் ஈடுபடும் தன்மையினை அதிகரிக்கும் நோக்கிலும் ஒரு சந்தர்ப்பமாக பாரம்பரிய கலைத்திறன் வெளிப்பாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் பாரம்பரிய கலைத்திறன் வெளிப்பாட்டுப் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் 2025.07.01 ஆம் திகதி முதல் கோரப்படுகின்றன.
- சுற்றுநிருபம்
- விண்ணப்பப் படிவம்