வடக்கு மாகாண வெசாக் உற்சவம் – 2026
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு நடத்திய 2026 ஆம் ஆண்டிற்கான வெசாக் உற்சவம் 02.06.2026 செவ்வாய்க் கிழமை அன்று வ/பரக்கும் மகாவித்தியாலய மைதானத்தில் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடக்கு கிழக்கு பிரதம சங்கநாயக்கரும் மடுகந்த சிறிதலதா விகாராதிபதியூமான வணக்கத்திற்குரிய ஆனந்த தேரர், வடக்கு கிழக்கு உதவி சங்கநாயக்கர் அட்டமகஸ்கட கல்யான திஸ்ஸ தேரரும், உள்ளடங்கலாக வவுனியா மாவட்ட தேரர்களும், பிரதம விருந்தினர்களாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எச். உபாலி சமரசிங்க அவர்களும் சிறப்புவிருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளா், திருமதி தனுஜா முருகேசன் அவர்களும் கௌரவ விருந்தினராக மாவட்ட செயலக மாவட்ட செயலாளர் திரு.பி.ஏ.சரத்சந்திரா அவர்களும் வவுனியா மாவட்ட மேலதிகச் செயலாளர், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் இவர்களுடன் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர், 56 வது படையணியின் பிரிகேட் கொமாண்டர், வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், வவுனியா வடக்கு வலயக்கல்விப்பணிப்பாளர், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கலைஞர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
முதலில் 4.00 மணியளவில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் தர்மபோதனைகள் இடம்பெற்றதுடன் தொடர்ந்து வெசாக் தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட பண்பாட்டுப்பேரணி ஆரம்பமானது பௌத்த பண்பாட்டினை பிரதிபலிக்கும் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் ஆரம்பமானது தொடர்ந்து வ/பரக்கும் மகாவித்தியாலய மைதானத்தில் சிறப்புற வடிவமைக்கப்பட்ட வடக்கு மாகாண வெசாக் வலயம் விருந்தினர்களினால் திறந்து வைக்கப்பட்டது அதில் சுமார் இருபதிற்கு அதிகமான பாடசாலைகளினால் அமைக்கப்பட்ட வெசாக்கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
தொடர்ந்து விருந்தினர்களினால் மங்கல விளக்கு ஏற்றப்பட்டு மேடைநிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் நி.தர்சினி அவர்களின் வரவேற்புரை, வரவேற்பு நடனம், தலைமையுரை, பிரதம விருந்தினர் உரையுடனும் 25 இற்கும் அதிகமான குழுவினரின் வெசாக் பக்திகீதங்கள், இனியநாடகங்கள் என்பன இடம்பெற்றதுடன் வெசாக்கூடு தயாரித்தல் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பணப்பரிசில்கள் மற்றும் கலைநிகழ்வில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்கள் என்பனவும் வழங்கிவைக்கப்பட்டன. தொடர்ந்து பொதுமக்களுக்கு ‘தன்சல’ விருந்தினர்களினால் ஆரம்பித்து வைகக்கப்பட்டது. ஏறத்தாழ 4000 பொதுமக்களுக்கு இன்நிகழ்வின் மூலம் உணவளிக்கப்பட்டது. நிறைவாக வவுனியா சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திரு.நித்தியானந்தன் அவர்களது நன்றி உரையுடன் வெசாக் கொண்டாட்டம் அதிகாலை 1.30 மணிக்கு இனிதே நிறைவுபெற்றது.















































