வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா – 2025

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் 16.12.2025 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிமுதல் முல்லைத்;தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில், கலைஞர் அரியான் பொய்கை செல்லத்துரை அரங்கில் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம. பற்றிக் டிறஞ்சன் அவர்களின் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் உயர்திரு.நா.வேதநாயகன் அவர்களும், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கௌரவ பிரதியமைச்சர் ஆர்.எச்.உபாலி சமரசிங்க அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருவாட்டி தனுஜா முருகேசேன் அவர்களும், கௌரவ விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களும், கலை விருந்தினராக முல்லைத்தீவு மாவட்டத்தின் மூத்த கலைஞர் திரு.நடராஜா இராமநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

இவர்களுடன் வடக்கு மாகாண உள்ளக கணக்காய்வாளர், முல்லைத்தீவு மாவட்ட வலயக்கல்விப் பணிப்பாளர்கள், முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், பண்பாட்டலுவல்கள் அலகின் கலை ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பிரதேசசபை உத்தியோகத்;தர்கள், கலாரசிகர்கள், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூத்த கலைஞர்கள், பொதுமக்கள் ஆகியோரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் பண்பாட்டு மரபுடன் வரவேற்கப்பட்டதுடன் பாரம்பரிய பொருட்கள், ஓவியங்கள், சிற்பங்கள், நூல்கள் கொண்டமைந்த கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டு விருந்தினர்களால் பார்வையிடப்பட்டது. தொடர்ந்து தமிழ்த்தாய்க்கு மாலை அணிவித்த பின்னர் விருந்தினர்களால் மங்கல விளக்கேற்றப்பட்டு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்களால் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு மேடை நிகழ்வானது இனிதே ஆரம்பமானது. முதல் நிகழ்வாக கிளிநொச்சி பிரதேச திரு.இராஜதுரை கலைக்குழுவினரின் மங்கல வாத்திய இசையும், மாங்குளம் முத்தமிழ் கலாமன்;ற மாணவர்களின் வரவேற்பு நடனமும் நிகழ்வினை அலங்கரித்தன.  வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் உதவிப்பணிப்பாளர் திருமதி.தர்சினி நிதர்ஷன் அவர்களினால் வரவேற்புரையும் அதனைத் தொடர்ந்து கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.க.திருக்குமரன் அவர்களால் அரங்கத் திறப்புரையும், கல்வி அமைச்சின் செயலாளரினால் தலைமையுரையும் நிகழ்த்தப்பட்டன.

தொடர்ந்து யாழ்ப்பாணம் பொன்னாலை சந்திர பரத கலாலய மாணவர்களின் ‘ஷண்முக கௌத்துவம்’ நடனநிகழ்வும், வவுனியா தெற்கு துஸ்யந்த கலைமன்ற மாணவர்களின் புத்தாக்க கண்டிய நடன நிகழ்வும், கிளிநொச்சி முழங்காவில் ஸ்ரீஆருத்திரா நர்த்தனாலய மாணவர்களின் வாள்நடன நிகழ்வும், மன்னார் கலார்ப்பணா நாட்டியப்பள்ளி மாணவர்களின் கிறிஸ்தவ நடனமும் விழாவினை மேலும் மெருகூட்டின. அதனைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டிற்கான வடந்தை நூல் வெளியிடப்பட்டது. கல்வி அமைச்சின் செயலாளரினால் கௌரவ அமைச்சருக்கு முதற்பிரதி வழங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து பிரதம விருந்தினர்கள், சிறப்பு விருந்தினர், கௌரவ விருந்தினருக்கும் பிரதிகள் வழங்கப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அவர்களினால் கௌரவ விருந்தினர் உரையும், வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களினால் சிறப்பு விருந்தினர் உரையும், கௌரவ பிரதி அமைச்சர், கௌரவ ஆளுநர் மற்றும் கௌரவ அமைச்சர் அவர்களினால் பிரதம விருந்தினர் உரைகளும் நிகழ்த்தப்பட்டிருந்தன. தொடர்ந்து மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலய மாணவர்களினால் ஹசீதா நடன நிகழ்வும், வவுனியா ஏழிசை மிருதங்க நடனாலய மாணவர்களின் நாட்டார் பாடல் நிகழ்வும், புதுக்குடியிருப்பு கலைமகள் கலாமன்றத்தினரின் கரகாட்டம் நிகழ்வும் மேடையினை அலங்கரித்தன.

அதனைத்தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்வானது ஆரம்பமானது. மூத்த கலைஞர்களுக்கு வழங்கப்படுகின்ற கலைக்குரிசில் விருது இம்முறை 14 கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டனர். அதன் பின்னர் வளர்ந்துவரும் இளங்கலைஞர்களுக்கு வழங்கப்படுகின்ற இளங்கலைஞர்விருது இம்முறை 09 கலைஞர்களுக்கும், 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்விருது 12 நூலாசிரியர்களுக்கும்; வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிறைவாக முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் செல்வி.சே.செல்வசுகுணா அவர்களின் நன்றியுரையினைத் தொடர்ந்து முல்லைத்தீவு கல்வி வலய இசை ஆசிரியர் குழாமினரின் தமிழ்மொழி வாழ்த்துடன் வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழாவானது பிற்பகல் 2.00 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.

 

Secretary

Mr. M. Patrick Diranjan
Secretary of Education, Cultural Affairs, Sports and Youth Affairs

Education Ministry Office,
Chemmany Road, Nallur, Jaffna, Sri Lanka

Tel:+94-21-221 9259
Fax: +94-21-222 0794
Mobile: 071 809 8059

Email:
patrickdiranjan@yahoo.com
npmoese@gmail.com

Vehicle Pass

January 2026
Mon Tue Wed Thu Fri Sat Sun
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
Carrier Guide Book